Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் குளத்தூர் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் நடந்த திறந்தவெளி கூட்டத்தில் பேசிய சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ்

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், குளத்தூர் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவி ஆ. ஜெயராணி மாயகிருஷ்ணன்  தலைமையில் புதுக்கோட்டை சைல்டுலைன் 1098ன் திறந்த வெளி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் குளத்தூர் துணை வட்டாட்சியர் மணி, பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் மதியழகி, ஊராட்சி செயலர்  ஜெயபாலன், பணித்தள பொறுப்பாளர் காந்தி, ஆசிரியர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில்  புதுக்கோட்டை சைல்டுலைன் 1098-ன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஆ. ஜோதிராஜ் கலந்து கொண்டு  பேசியதாவது: மாவட்டத்தில பாதிக்கப்பட்ட குழந்தைகள் தானாகவோ, அவர்களைப்பற்றி உறவினர்களோ, பொதுமக்களோ 1098 என்ற இலவச தொலைபேசியின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி தகவல் பெறப்படுகிறது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சைல்டுலைன் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு தக்க உதவிகள் அளித்து தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து, மறுவாழ்வு அளித்து வருகிறது. அதில் காணாமல் போன குழந்தைகள் பொற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

பள்ளிக், குழந்தைகள், சுயஉதவிக்குழுக்கள், பொது மக்கள் ஆகியோருக்கு சைல்டுலைன் 1098 பற்றி விழிப்புணர்வு கொடுத்து அவர்கள் மூலமாகவும் தகவல் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குழந்தை திருமண சட்டத்தின்படி குழந்தை திருமணங்கள் கிராமங்களில் நிகழாதவாறு அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதோடு. குழந்தைத் திருமணம் நடைபெறுவது பற்றி தகவல் கிடைத்தால் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU) ஆள் கடத்தல் தடுப்புப் பிhpவு (AHTU) மற்றும் உள்ளுர் காவல் அலுவலர்கள், ஊர்த்தலைவர்களின் உதவியுடன் குழந்தை திருமணத்தைத்தடுத்து நிறுத்தி அக்குழந்தையை மீட்டெடுத்து குழந்தைகள் நல ஆலோசனை குழுவிடம் (CWC); ஒப்படைத்து பெற்றோரிடமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உறுதி சான்றிதழ் பெற்று குழந்தைககு 18 வயது பூர்த்தியாகும் வரை திருமணம் செய்யக்கூடாது என எச்சரித்து தக்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

மேலும், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகளைக் கண்டறிந்து அக்குழந்தைக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் அளிக்கப்படுவதோடு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய நபருக்கு சட்டத்தின் மூலம் தகுந்த தண்டணை பெற்றுத் தரப்பட்டுவருகிறது. கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தைகள், ஆதரவற்றக் குழந்தைகள் கண்டறியப்பட்டால் முதலுதவி அளித்து அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகிறது. வீதியோரக் குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்கி தொடர்ந்து படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது  என்றார் அவர்.

ஏற்பாடுகளையும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்  செய்திருந்தனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள், பெரியவர்கள் என சுமார் 420 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சைல்டுலைன் 1098ன்பணியாளர்  லியோன்ராஜ்  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top