Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினர் புத்தாடை வழங்கல்

புதுக்கோட்டை

நகராட்சிப்பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய எம்எல்ஏ முத்துராஜா,நகர்மன்றத்தலைவர் திலகவதி மற்றும் செஞ்சுரி லயன்ஸ் நிர்வாகிகள்

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 100  பேருக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டது.

லயன் முன்னாள் தலைவர் சந்தைகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் லயன் டாக்டர் முத்துராஜா  பங்கேற்று  நகராட்சிப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் தலைவர் லயன் அரவிந்த்  லயன் கண்ணன் லயன் எஸ் .பாலாஜி லயன் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top