Close
நவம்பர் 22, 2024 10:46 காலை

விதைப்பண்ணைகளை பதிவு செய்து தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம்…

புதுக்கோட்டை

விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு புதுக்கோட்டை வேளாண்துறை அழைப்பு

விதைப்பண்ணைகளை பதிவு செய்து தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறை தகவல் தெரிவித்துள் ளது.

 விதை உற்பத்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவி விதை அலுவலரை அணுகி விதை பண்ணை பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட (ழேவகைநைன ஏயசநைவநைள) இரகங்களில் மட்டுமே சான்று விதை உற்பத்தி செய்ய இயலும். மேலும் அப்பகுதி விவசாயிகளின் விதை மற்றும் ரகங்களின் தேவையினை அடிப்படையாக கொண்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக விதைப்பண்ணை பதிவு செய்யப்படும்.

விதைகளை விதைத்த 30 நாட்களுக்குள்ளாக மற்றும் நெல்லை பொருத்தவரை பூப்பதற்கு 15 நாட்கள் முன்பாக இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வெவ்வேறு இரகங்களுக்கு மற்றும் வெவ்வேறு நிலைகளுக்கு தனித்தனி விதைப்பு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ஒரு விதைப்பு அறிக்கையில் அதிகபட்சமாக 25 ஏக்கர் வரை பதிவு செய்யலாம்.

விதைப்பண்ணைகளின் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர் இடைவெளியில் இருந்தாலோ விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் இடைவெளி இருந்தால் தனித்தனி விதைப்பு அறிக்கைகளாக பதிவு செய்ய வேண்டும். விதைப்பு அறிக்கைகள் விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக இணையதளத்தில் ஒப்புதல் அளிக்கப்பெற்றபின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விதைப்பறிக்கை நகல்களுடன் விதைப்பண்ணைக்கு உபயோகப்படுத்தப்பட்ட விதைக்கான சான்றட்டை, விதை வாங்கியதற்கான இரசீது, விதைப்பண்ணை வரைபடம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

ஒரு விதைப்பறிக்கை பதிவு செய்ய பதிவுக்கட்டணம் ரூ.25-, வயல் ஆய்வு கட்டணம் (ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.100- மற்றும் சிறு தானியங்களுக்கு ரூ.150-, பயறு மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு ஏக்கருக்கு ரூ.80-) மற்றும் விதை பரிசோதனை கட்டணம் ரூ. 80- செலுத்தப்பட வேண்டும்.

விதை ஆதாரம் மற்றும் மேற்கண்ட விபரங்கள் சரியானதுதானா என ஆராய்ந்த பின் விதைப்பு அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வாயிலாக புதுக்கோட்டை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைக்கு பதிவு எண் வழங்கப்படும். விதைப்பண்ணை பதிவிற்குபின் விதைச்சான்று அலுவலர்களால் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதை தரம் உறுதி செய்யப்படுகிறது.

நடப்பு சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள (சன்ன இரகங்கள் மற்றும் CR 1009 Sub 1) விவசாயிகள், விதை உற்பத்தி செய்வதில் ஆர்வம் இருப்பின் மேற்கண்ட விவரங்களுடன் விதைப்பண்ணைகளை பதிவு செய்து சான்று விதை உற்பத்தி செய்திட தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநih அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நல் விளைச்சலுக்கு வித்தே ஆதாரம். எனவே நல் விதை உற்பத்தி செய்து தாங்கள் பயன் அடைவதோடு மற்ற விவசாயிகளும் பயன் அடைய விதைப்பண்ணை அமைப்போம் நல்ல லாபம் பெறுவோம் என்று உதவி இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி தகவல் வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top