Close
நவம்பர் 22, 2024 12:48 மணி

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் மதுசூதன்ரெட்டி

சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான  விவசாயி கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு  ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான பயிர்க்கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீடு, ஜிப்சம், உரம் வழங்குதல், பி.எம்.கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத் தருதல்,
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் தொகை, சம்பா மிளகாய் நாற்றுக்கள், கத்தரி வெங்காயம், பயிர்சேத இழப்பீட்டுத் தொகை வழங்குதல், பவர் டில்லர் வழங்குதல், வரத்துக்கால் வாயில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல்.

வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய கிணற்றிற்கான செயல்படாத மோட்டார் பம்பிற்கு பதிலாக புதிய மோட்டார் பம்ப் வழங்குதல் அரசு மானியத்து டன் கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் விவசாயப் பணிகளுக்கு ரோட்டவேட்டர் வழங்குதல்.

கண்மாய் கால்வாய் சீரமைத்து தருதல், கண்மாய் கலிங்கி மறு கட்டுமானம் செய்து தருதல், கண்மாயின் வரத்துக்கால் வாயில் உள்ள முள் செடிகளை அகற்றுதல், கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுதல், மடைகளின் பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைத்தல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தோண்டியுள்ள விவசாய கிணற்றிற்கு மின் இணைப்பு வழங்குதல் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றுதல், புறவழிச் சாலை அமைத்தல், பட்டா ரத்து மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா திருத்தம் மற்றும் மாறுதல் நில அளவை செய்தல்,
ஊரணியில் தனிநபர் ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல்,சாலை யில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல், கருவேல் மரங்களை ஏலமிடுதல், விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீரை அகற்றுதல், நீர் வழித்தடம் அமைத்தல் பொதுப் பாதைகளை மீட்டுத்தருதல்.

நெல்மூட்டைகள் மழை மற்றும் வெயிலினால் சேதமடையா மல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோருதல், இலவச வண்டல் மண் தார்ச்சாலை அமைத்தல், தெருவிளக்கு பழுது நீக்கம் செய்தல், இணைப்புச்சாலை மெட்டல் சாலை மற்றும் சிறுபாலம் அமைத்தல், நிழற்குடை அமைத்தல், சாலையை செப்பனிடுதல், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றுதல்.

பொது மயானத்திற்கு மின்வசதி அமைத்தல், நியாயவிலைக் கடைக்கு தனிக்கட்டிடம் கட்டுதல், புதிய போர்வெல் டேங்க் மற்றும் பைப்லைன் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய மடைக ளில் உள்ள ஆக்கிரப்புக்களை அகற்றுதல், பொதுக்கழிப்பறை வசதி அமைத்தல்.
அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், பனை விதை நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும் படியும்  துறை சார்ந்த அலுவலர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப் புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை பெற்றிட தேவையான சான்றிதழ்களை வழங்கிட துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து பணியாற்றிடவும், நில அளவைத் துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப் பணியினை விரைந்து மேற்கொள்ளவும்.

விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும் கண்மாய்களில் உள்ள மடைகள் தடுப்புச் சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீர்செய்திடவும்.

மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும் வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் செங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.326000 மதிப்பீட்டில் பயிர்க் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், வேளாண் துறை இணை இயக்குநர்(பொ) ஆர்.தனபாலன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் கோ.ஜீனு வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), எஸ்.பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top