Close
நவம்பர் 22, 2024 3:53 காலை

உள்ளாட்சி நாள்…ஈரோடு மாநகராட்சி பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் நடந்த மாநகர் சபைக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாநகராட்சியில் பகுதி இரண்டு சார்பில் எஸ் எஸ் பி நகரில் நடந்த பகுதி சபைகூட்டத்தில் வீட்டு வசதி துறை எஸ். முத்துசாமி  பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு நவம்பர் ஒன்றாம் தேதியும் உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.  ஏற்கெனவே கிராம பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், அதைப்போல நகர் புறம் மற்றும் கிராமங்களில் வார்டு வாரியாக   மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல் கூட்டம் ஈரோடு மாநகராட்சி எஸ்.எஸ்.பி. நகரில்  நடந்த மாநகர் சபைக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி  பேசியதாவது:

மக்களை தேடி மாநகராட்சி நிர்வாகம் வந்து உங்களது குறைகளை கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும். மாநகராட்சியில் நிதி தட்டுப்பாடு இருந்தபோதிலும் படிப்படியாக சாலை வசதி தெரு விளக்கு சாக்கடை போன்ற வசதிகள் உருவாக்கப்படும்.

குப்பைகளை சாக்கடையில் போடாமல் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது பல்வேறு திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. அவைகளை விரைந்து சரி செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்து இங்குள்ள பொதுமக்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்தது குறித்து ஆய்வு செய்யப்படும்.

பொதுமக்களும் குப்பைகளை தெருவில் மற்றும் சாக்கடை யில் போடாமல் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்பகுதியில் மட்டும் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக தமிழக முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கு 85 வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வை அவர் நடத்தி வருகிறார். நிதி தட்டுப்பாடு பிரச்னை இருந்தாலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர் முத்துசாமி.

இதில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி யம், கிருஷ்ண சிவகுமார், கவுன்சிலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top