Close
ஏப்ரல் 4, 2025 11:23 காலை

ஈரோட்டில் மழை நீரால் பாதித்த பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

ஈரோடு

ஈரோடு மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு  அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு   ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாநகராட்சி 60 -ஆவது வார்டு வெண்டிப்பாளையம் நுழைப்பாளையத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட
வெள்ளப் பெருக்கில்  ரயில்வே நுழைவுப் பாலத்தில் பொது மக்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து, தகவலறிந்ததமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டு சீர் செய்யும் பணியினை மேற்கொண்டார். உடன் மாநகர திமுக செயலாளர் மு.சுப்ரமணியம், நெசவாளர் அணி மாநில அமைப்பாளர் எஸ். எல். டி. சச்சிதானந்தம் ஆகியோர்  இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top