திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடந்த ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 13.11.2022 ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய் வாழ்த்து, மற்றும் கல்லூரி வாழ்த்துப்பாடலுடன் இந்நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார். திருச்சி, திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், தலைவர் சுவாமி சுத்தானந்த தலைமையில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ( பொறுப்பு ), சுவாமி நியமானந்த தலைமையுரையாற்றினார்.
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் சுவாமி ஸத்யானந்த, விவேகானந்த மேனிலைப்பள்ளியின் செயலர் சுவாமி பரமானந்த மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் இணைச்செயலர் சுவாமி ருத்ரானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள். விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திருச்சி, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் மகாசபை உறுப்பினர்கள் அழகப்பன், இராமமூர்த்தி, சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் விவேகானந்த கல்லூரியின் மேனாள் முதல்வர்கள் முனைவர்கள் சுப்ரமணியம், வன்னியராஜன், இராமமூர்த்தி, இராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் மதுரை, பேரா.சொ.சொ.மீ.சுந்தரம் “சித்பவானந்தர் வாழ்வும் வாக்கும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
விவேகானந்த கல்லூரி மாணவர்களின் “துறவி வேந்தன் புத்தர்” என்ற நாடகமும் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் “தபோபலன்” என்ற நாடகமும் சிறப்பாக நடைபெற்றது .
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவன செயலர் சுவாமி ஸத்யானந்த அவர்கள் அருளுரை வழங்கினார். விவேகானந்த கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
ஸ்ரீராமகிருஷ்ண தபோவன கிளை நிறுவன சுவாமிகள் மற்றும் அம்பாகள், பெற்றோர்கள், தாய்மார்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தபோவனத்தைச் சார்ந்த பல்வேறு அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றார்கள்.
இந்நிகழ்ச்சியைத் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனக்கிளை கல்வி நிறுவனங்களான திருவேடகம் விவேகானந்த கல்லூரி, விவேகானந்த மேல்நிலைப்பள்ளி, விவேகானந்த மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் நரேந்திரா மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.