Close
நவம்பர் 22, 2024 11:35 மணி

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா தீவிவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று தாக்கியது. பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியது. இதனால் சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 எட்டியுள்ளது. மேலும் இடிபாடுகளிடையே மக்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில், மேற்கு ஜாவா மாகாணத்தில் சியாஞ்சூர் என்ற இடத்தில் மையம் கொண்டு திங்களன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால், 22 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 எட்டியுள்ளது. 100க்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்துடன் வீதிகளில் குவிந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பல சாலைகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளதோடு மின்விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் – ”இந்தியா – பாக். இடையே நல்லுறவு வேண்டும்; ஆனால் பாஜக அரசு அதை நிகழ விடாது” – இம்ரான் கான்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top