Close
செப்டம்பர் 20, 2024 3:35 காலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் ஆலையில் இருந்து மழை நீருடன் வெளியேற்ற பட்ட ரசாயன கழிவால் நிறம் மாறிபோனதா குளத்தின் நீர்.. ?

ஈரோடு

ஈரோடு அருகே பெருந்துறையில் தொழில்சாலை கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து மழை நீருடன் வெளியேற்ற பட்ட ரசாயன கழிவால் நிறம் மாறிபோன குளத்தின் நீரால்   200- மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியில் உள்ள பெரிய வேட்டுவபாளையம், சின்னவேட்டுவ பாளையம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி, வெட்டுகாட்டுவலசு, கடப்பமடை,காசிபில்லாம்பாளையம்,செங்குளம்,கூத்தம்பாளையம்,குட்டப்பாளையம், குமாரபாளையம், ஓடைகாட்டூர், பாலிகாட்டூர், சேடங்காட்டூர், கம்பிளியம்பட்டி, வரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்த விவசாய பகுதிகள் 2800- ஏக்கரை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1990- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு 1993- ம் ஆண்டு முதல் 1994- ம் ஆண்டு வரையில் நிலம் கையகப்படுத்தபட்டு தொழிற்சாலை அமைக்கப்பட்டு 200- க்கும் மேற்பட்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த சிப்காட் தொழிற்பேட்டையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று விதமான நிறத்தில் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இதில் அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ள சிவப்பு நிற குறியீடு கொண்ட சாய ஆலை, துணி ஆலை, தோல் தொழிற்சாலை,இரும்பு உருக்கு ஆலை, கண்ணாடி ஆலை, டயர் தயாரிப்பு ஆலை, பேட்டரி தயாரிப்பு ஆலை, மெத்தை தயாரிப்பு ஆலை, எரிவாயு உருளை தயாரிப்பு ஆலை, சிமென்ட் குழாய் தயாரிப்பு,பிளாஸ்டிக் குழாய் தயாரிப்பு ஆலை என 200- க்கும் மேற்பட்ட தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பூஜ்ஜியம் முறையில் சுத்திகரிப்பு செய்யபட்டு வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் செங்குளம் பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வடமாநிலத்தை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கு சொந்தமான ஆர் கே ஸ்டீல் என்ற இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் இந்த ஆலையில ரசாயனங்களான பெரிக்ஸ் பெராக்சைடு, குளோரோக்சைடு போன்றவற்றை பயன்படுத்தி இரும்பை உருக்கும் போது வரும் கழிவுகளை மழை நீருடன் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக செங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் தேங்கி நீர் சிவப்பு நிறமாக மறி குளத்தின் தண்ணீர் நிரம்பி குளத்தின் நீர் வழி பாதை வழியாக விவசாய பகுதிகளுக்கு உள்ளே சென்றது.

இதனால் சுமார் 200- ஏக்கர் விவசாய நிலத்தில் ஆலையின் திடக்கழிவு விவசாய பகுதியில் தேங்கியது.மேலும் இந்த கழிவு நீரை பயண்படுத்திய ஆடு,மாடுகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு

இதனை தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குளத்தில் தேங்கிய கழிவுகளை ஆய்வு செய்து மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இந்த கழிவு நீர் பிரச்னை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு ஆலை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்த கழிவு வெளியேறிய சம்பவம் தொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் விசாரித்த போது தங்களது ஆலையில் இருந்த கழிவுகள் பத்திரமாக சேகரிக்கபட்டு வருவதாகவும் இந்த குளத்திற்கு வரும் நீர் வழி பாதை வழியாக வேறு ஆலை யின் கழிவுகள் மழை நீருடன் வந்து இருக்கலாம் என்று தற்போது நடந்த பிரச்சினைக்கும் எங்களது ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குளத்தின் நீரை ஆய்வு செய்து அந்த ஆய்வின் முடிவில் கிடைக்கப்பெற்ற அறிக்கையை வைத்து நடவடிக்கைகள் எடுக்கும் போது தான் உண்மை நிலவரம் தெரியவரும் எனகூறப்படுகிறது,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top