Close
நவம்பர் 22, 2024 10:15 காலை

பொன்னமராவதி வட்டம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படுகிறது: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை

மக்கள் தொடர்பு முகாமுக்கான முன் மனுக்கள் பெறும் முகாம்

புதுக்கோட்டை மாவட்ட, மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பொன்னமராவதி சரகம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் 1.12.2022 அன்று முன்மனுக்கள் பெறப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்,  இலுப்பூர் கோட்டம், பொன்னமராவதி வட்டம், பொன்னமராவதி சரகம், தேனூர் வருவாய் கிராமத்தில், எதிர்வரும் 14.12.2022 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு  1.12.2022 அன்று காலை 10.30 மணியளவில் பொன்னமராவதி தாலுகா, பொன்னமராவதி சரகம், தேனூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் முன்மனுக்கள் பெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top