புதுக்கோட்டையில் குழந்தைகள் நல மருத்துவராகவும் சமூகத்தின் மீது அக்கறை உள்ள மருத்துவர் எஸ்.ராமதாஸ் அவர்களுக்கு அருண்மொழியின் ஆதரவற்ற 500க்கும் மேற்பட்ட சடலங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.
மேலும் போஸ்நகரில் செயல்படும் எரிவாயு தகன மேடையை சர்வஜித் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி மூலம் நிர்வகித்து வருகிறார் மேலும் மாத்தூரில் செயல்படும் வள்ளலார் மாணவர் இல்லத்தையும் நிர்வகித்து வருகிறார் மகத்தான மனிதர் மருத்துவர் ராம்தாஸ்.
புதுக்கோட்டையில் குழந்தைகள் நல மருத்துவராக சமூக பணியை தொடங்கிய இவர். மருத்துவத் துறையில் ஓய்வு பெற்ற பிறகும் இந்த சமுதாயத்திற்காக ஓயாமல் ஓடி கொண்டிருக்கிறார் மனிதம் மரித்துப்போனஇந்த அவசர உலகில் அடுத்தவரைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் இதுவரை ஆதரவற்ற 500-க்கும் மேற்பட்ட மனித உடல்களை தன் சொந்த செலவில் இறுதிசடங்கு செய்து அடக்கம் செய்து இருக்கிறார்.
உறவுகள் இருந்தும் கைவிடப்பட்டவர்களுக்கு இறுதி உறவினராக சொந்தங்கள் ஒளிந்து கொண்ட பின்னரும் கடைசி சொந்தமாக தாயுமானவராக, தலைமகனாகஇருந்து இறுதி சடங்கு என்னும் இறைப் பணியை செய்து வரும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மகத்தான பணி இன்னும் பல ஆண்டுகள் தொடரவும், அவர்களின் தன்னிகரற்ற இச்சேவையை பாராட்டும் விதமாக அருண் மொழியின் ஓயாத அலைகள் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டை சமூக ஆர்வலர்கள் இணைந்து விருது வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் ஓயாத அலைகள் அறக்கட்டளை நிர்வாகி முனைவர் கோ.கண்ணன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜா உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம், சிங்கப்பூர் நாகமணி, ஜெபிஆர். பெல் கண்ணன் , கார்த்திக் முத்துவீரன் வசந்த், ஜான்சிராணி, ஓவியா, இதயம் ஹமீது.
ராமசாமி, புதுகை செல்வா, சேவியர்பாபு, முத்துகணேஷ், லெட்சுமணன், அர்பன் சீனிவாசன், ஆத்மா இரத்தவங்கி நிர்வாகிகள், பிவெல் மருத்துவமனை நிர்வாகிகள், ஜெ. நிஜாம்முகமது, விஆர்எம். தங்க ராஜா, தினேஷ், மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.