Close
நவம்பர் 22, 2024 7:27 காலை

குப்பை வரியை ரத்து செய்ய  ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற மாநகராட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்

ஈரோடு மாநகராட்சியில் விதிக்கப்படும் குப்பை வரியை ரத்து செய்ய  வேண்டுமென  பெருவாரியான கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ஈரோட்டில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்  மேயர் நாகரத்தின சுப்ரமணியம்  தலைமையில், துணை மேயர் செல்வராஜ் ஆணையர் சிவக்குமார்  உட்பட பல்வேறு  அதிகாரிகள் முன்னிலையிவ் நடைபெற்றது.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள்  பேசியதாவது:  வீட்டு வரியை விட குப்பை வரி பலமடங்கு உள்ளது. நகரங்களில் வீட்டு வரியில் சில சதவீதம் குப்பை வழியாக வசூலிக்கப்படு கிறது.   ஆனால் இங்கு கட்டிடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப வரி விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அந்த வரியை நீக்க வேண்டும்.

இதேபோன்று புதை சாக்கடை இணைப்புகள் பல பகுதிகளில்  வீடுகளுக்கு வழங்கவில்லை. ஆனால், அதற்காக வரி செலுத்த பொதுமக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மாநகராட்சியில் சில தீர்மானங்கள் கொண்டு வரப்படும் போது குறிப்பிட்ட தீர்மானங்களை உறுப்பினர்களின் ஆட்சேபனையை அடுத்து நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அரசாணையை நிறுத்தி வைக்க உறுப்பினர் கள் கூறியதை மன்றம் அங்கீகரித்தது. ஆனால் உறுப்பின ருக்கு மறுநாள் வந்த சுற்றறிக்கையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக உள்ளது.

ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டப் பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் கேட்டால் மாநகரட்சிஅதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.  ஆனால் ஊராட்சி கோட்டை குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவனம் பதில் அளிப்பதில்லை.

பழைய பாளையம் பகுதியில் திட்டத்தின் கீழ் வரும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.  புதை சாக்கடைத் திட்டத்திற்கு தோண்டப்படும் மண் வீடுகள் முன்பு கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.  இதை நீக்க வேண்டும்.

மாநகராட்சிக்கு வெளியே நல்ல கவுண்டன் பாளையம் பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்க திட்டமிடுவதை எதிர்க்கிறோம் என்று  அவர்கள் பேசினர்.

ஆணையர் சிவகுமாரின் பதில் வருமாறு நல்ல கவுண்டம் பாளையம் பகுதியில் குடிநீர் வழங்க திட்ட மதிப்பீடு கூறப்பட்டுள்ளது.  இதற்கு 18% கூடுதல் கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.  இந்த மதிப்பீட்டை முழுவதுமாக குடிசை மாற்று வாரியம் வழங்கும். எனவே மாநகராட்சிக்கு இதனால் நிதி சுமை இல்லை.

குப்பை வரி அரசு ஆணையின்படி தான் வசூலிக்கப்படுகிறது அதிகம் இருக்கும் என்றால் சொத்து வரி ரசீதுடன் பொது மக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பரிசளித்து வரி குறைக்கப்படும். கடந்த வாரம் மின் தடை காரணமாக குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

நிலைமை சரி செய்யப்பட்டு வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் வீட்டு செய்தி அமைச்சர் இன்று ஊராட்சி கோட்டை திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். ஒவ்வொரு வாரமும் ஆட்சியரும்  ஆய்வு செய்ய உறுதி அளித்துள்ளார். புதை சாக்கடை இணைப்புகள் இல்லாத இடங்களில் சொத்து வரி மற்றும் குப்பை வரி மட்டும் வாங்க லாம்.

பாதாள சாக்கடை வரி வாங்க வேண்டியது இல்லை. துப்புரவு தொழிலாளர் சம்பந்தப்பட்ட அரசு அணையை பரிசளித்து மட்டுமே மன்றத்துக்கு அனுமதி உள்ளது. அதன்படியே கடந்த கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top