Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

அம்மாபேட்டை பேரூராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என். நேரு திறப்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் கே.என். நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டைதேர்வு நிலை பேரூராட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் அரசுநலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு  தலைமையில்  அரசு தலைமை கொறடா முனைவர். கோவி.செழியன்  பேரூராட்சி ஆணையர்  ஆ.செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

பின்னர் அமைச்சர்  கே.என்.நேரு  கூறியதாவது: தமிழக முதல்வரின்  ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்மாபேட்டைபேரூராட்சியில் 2018-2019 ஆம் ஆண்டு மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி  மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்துநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்து பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இப்பேருந்துநிலையம் 2018-19 ஆம் ஆண்டு தமிழகஅரசின்  மூலதனமானியநிதி  ரூ.2.64 கோடி  மற்றும் பேரூராட்சி பங்குதொகை ரூ.36.00 லட்சம் ஆக கூடுதல் ரூ.3 கோடி  மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாடு செய்யப்பட்டுள்ள புதியபேருந்து நிலையத்தினுள் 10 பேருந்து நிறுத்தங்கள், 17 கடைகள் உள்ளடங்கிய வணிக வாளகம், உணவகம், இரு சக்கர வாகன பாதுகாப்பகம், ஆண் பெண் இரு பாலருக்கும் நவீன சுகாதார வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்,பெண் பயணிகள் காத்திருப்பு அறை, பேருந்து ஓடுதளம், பயணிகள் நடைபாதை, பயணிகள் நிழற்குடை, பயணிகள் இருக்கைகள், எல்இடி மின்விளக்கு வசதி, உயர்மின் கோபுர விளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 15 -ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 17 கடைகள் 1 உணவகம் மற்றும் இரு சக்கரவாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் மூலமாகரூ.10.64 இலட்சமும், தினசரிவந்து செல்லும் பேருந்து  நுழைவு கட்டணம் வசூல் மூலமாகரூ.3.45 இலட்சம் ஆக மொத்தம் 14.09 இலட்சம் ஆண்டு ஒன்றுக்கு வருவாய் கிடைக்கும்.

மேலும், அம்மாபேட்டை தேர்வுநிலை பேரூராட்சி தனிநபர் கழிவறை கட்டும் 10 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 9,334 அரசுமானியமும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 2,10,000 அரசு மானியமும், சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 9 நபர்களுக்கு விதவை உதவித் தொகையும், 1 நபருக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகையும்.

குடிமைப் பொருள் வழங்கல் துறைசார்பில் 10 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகளும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 17 சுய உதவிக் குழுகளுக்கு சமுதாய முதலீட்டு நிதியும்,4 குழு கூட்டமைப்புக்கு வங்கிக் கடன்களும், கருணை அடிப்படையில் 1நபருக்கு பணிநியமன ஆணைய உள்பட மொத்தம் 66 பயனாளிகளுக்கு  ரூபாய் 3,37,62,340 கோடிமதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சி 15 வது -நிதிக்குழுமானியத்தின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் பெரியண்ணன் நகர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இவ்விழாவில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சு .கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்  செ. ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள்  துரைசந்திரசேகரன் (திருவையாறு), கஅன்பழகன் (கும்பகோணம்), எம் .எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்),  கூடுதல் ஆட்சியர் வருவாய் என்.ஓ.சுகபுத்ரா ,மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாகந்தபுணணி.

மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர் உஷா புண்ணியமூர்த்தி, கும்பகோணம் மாநகராட்சி துணைமேயர்  சு.ப.தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்  எஸ்.கே.முத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கோ.கனகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்  கே.வி.கலைச்செல்வன், அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர்  இரா.இராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top