புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் ரெகுநாதபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்கு, துணை ஆட்சியரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன் தலைமை வகித்தார். அறந்தாங்கி தனி வட்டாட்சியர் திரு. ரமேஷ் முன்னிலை வகித்தார்.
துணை ஆட்சியர் கருணாகரன் பேசுகையில், விடுதியின் அடிப்படை வசதிகளை என்னால் இயன்ற அளவு செய்து தருகிறேன். அதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள விடுதியின் காப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
அதே போல் மாணவர்கள் விடுதியில் தங்கி பயிலுவதற்கு
பெற்றோர்களும், பள்ளியின் ஆசிரியர்களும்,காப்பாளரும் இணைந்து மாணவர்களின் எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இதில், ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், உதவி தலைமை ஆசிரியர் பாண்டியன், பட்டதாரி ஆசிரியர் பாலசுப்பிரமணியன், காப்பாளர் ஈஸ்வரன் அண்ணாதுரை, காவல் துறை அலுவலர்கள், 35 மாணவர்களின் பெற்றோர்கள்,55 மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்
மேலும், பெற்றோர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். சில மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு தனிக்கவணம் செலுத்துவது தொடர்பாக வும், இவ்விடுதியில் தரமாக வழங்கப்படுகிறது.
நிகழ்வில் ஸ்டீபன் ஹாக்கிங் துளிர் இல்லம் துவங்கப்பட்டது.
துளிர் ஆண்டு சந்தா 5 மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் டாக்டர்.பிச்சைமுத்து துணை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்வில் விடுதியில் மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியை காப்பாளர் சிவானந்தம் ஒருங்கிணைத்தார்