புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலவிடுதி களில் 2021-2022 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறை களைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப் படுகிறது.
அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிட்டு மனுக்களைப் பெறுவதுண்டு.
மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி-சுற்று வட்டார ஏழை மக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தித் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடத்தப்படுவதுண்டு. அவர்கள் குறைகளுக்கு அந்த முகாமிலேயே தீர்வு காணக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது.