Close
செப்டம்பர் 18, 2024 12:35 காலை

மார்கழி மாதப்பிறப்பு… திருப்பள்ளி எழுச்சியை கோலமிட்டு வரவேற்க தயாராகும் பல வண்ண கோலப்பொடிகள்

புதுக்கோட்டை

மார்கழி மாதப்பிKப்பையொட்டி புதுகை சாந்தநாதர் சந்நிதி வீதியில் விற்பனைக்கு குவிந்துள்ள பல வண்ண கோலப்பொடி

மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு  புதுக்கோட்டையில்  விற்பனைக்கு வந்துள்ள பல வண்ணக் கோலப்பொடி ரகங்களை பெண்கள் ஆர்வத்துடன்  வாங்கிச் சென்றனர்.

அதிகாலை எழுந்து கோலம் இட்டு, அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்பது  தமிழக மக்களின் வழக்கம்.  விதவிதமான வண்ணங்களில் கோலமிடுவதற்கு வண்ண கோலப்பொடிகள்தான் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.

இதனால், வெள்ளிக்கிழமை மார்கழி மாதம் பிறப்பதையொட்டி  புதுக்கோட்டையில் கோலப்பொடி விற்பனை தீவிரமடைந்துள்ளது. பல வண்ண கோலப் பொடிகளின் விற்பனை கார்த்திகை  தீபத்துக்கு முன்பு  தொடங்கியது. தற்போது, மார்கழி மாதம்  பிறக்கவுள்ளதால் விற்பனை நன்றாக இருக்கும். இந்த கலர் கோலப்பொடிகளின் விற்பனை தை முதல் வாரம் வரை நீடிக்கும்.

புதுக்கோட்டை
கோலப்பொடி

இது குறித்து புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமி கோவிலின் அருகிலுள்ள ஜி.டி.என். பூஜை பொருட்கள் கடை நிர்வாகி சேகர் கூறியதாவது:

மார்கழி மாதம் முழுவதும், பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த மாதத்தில் இருக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையில் எழுந்து வீடுகளுக்கு முன்பு பல்வேறு வண்ணங்களில் கோலங்கள் போட்டு அசத்துவார்கள்.இதற்கு மிக முக்கியமாக வண்ண கோலப் பொடியை பயன்படுத்து கின்றனர்.

இதனால் புதுக்கோட்டையில் கோலப் பொடி விற்பனை களை கட்டியுள்ளது. .கலர் கோலப்  பொடிகளை பெண்கள் ஆர்வத்து டன் வாங்கி செல்கிறார்கள். இந்த சீசனை கருத்தில் கொண்டு நகரில் சாலையோர கடைகளில் தள்ளு வண்டி களிலும் ஆங்காங்கே பல வண்ண கோலப்பொடி விற்பனை யும் நடைபெற்று வருகிறது.

கோலப்பொடி விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது ரூ.10 முதல் ரூ.100 வரை கோலப்பொடி பாக்கெட்டுகள் விற்பனை வைக்கப்பட்டுள்ளன. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள் என்றார் அவர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top