புதுக்கோட்டை நகராட்சிகுள்பட்ட ஆறாவது வார்டு சேர்வராயன்குளம் ரூபாய் 89 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரி நான்கு சுவர்கள் எழுப்பட்டு பக்கவாட்டு பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தரமற்ற பொருட்களை வைத்து தரம் இல்லாமல் இந்த பணியை மேற்கொள்வதால் இந்த வார்டு நகர் மன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அந்தந்த வார்டுகளில் உள்ள குளங்களை நிதி ஒதுக்கி குலத்தினை மேம்படுத்தும் பணி நடைபெற்று வந்தது அதன் ஒரு பகுதியாக நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டுக்குள்பட்ட சேர்வராயன் குளம் தூர்வாரி மேம்படுத்துவதற்காக ரூபாய் 89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 25.3.2022 அன்று பூமி பூஜை போடப்பட்டது.
பூமி பூஜை போடப்பட்டதிலிருந்து வேலைகள் தாமதமாக நடந்து வந்ததாகவும் முறையாக குளத்தினை தூர்வாராமலும் குளத்தை சுற்றியுள்ள கரைகளை மழைக்காலத்தில் கரையாமல் இருப்பதற்காக சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு படிக்கட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் பெய்த மழையால் கரையை சுற்றி பதிக்கப்பட்டுள்ள சிமெண்ட் கற்கள் பெயர்ந்து விழத் தொடங்கியது.இது தொடர்பாக அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் சத்யாமாரிமுத்து மற்றும் பொதுமக்கள் பலமுறை ஒப்பந்தக்காரர்களிடம் பலமுறை புகார் கூறியும் முறையாக பதில் அளிக்கவில்லையாம்.
இதனை அடுத்து ஒப்பந்ததாரர்கள் தரமற்ற பொருட்களை வைத்து முறையாக குளத்தினை தூர்வாரி முறையாகப்பணி செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஆறாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பொதுமக்களுடன் திரண்டு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி பொறியாளர் சேகரனையயும் முற்றுகையிட்டு இந்த சேர்வராயன் குளத்தினை முறையாக தூர்வாரி தரமான பொருட்களை வைத்து பணியை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் இந்த பணி செய்ய வேண்டாம் என்று தெரிவித்தனர். ஆறாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் அனைத்து வேலைகளும் தாமதமாக நடந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.