பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி கனரா வங்கி சார்பில் நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் கிராமப்புற அமைச்சகம் (Ministry of Rural Development, Govt of India) வழிகாட்டுதலின்படி, கனரா வங்கி கிராமப்புற கயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் தொழில் திறன் பயிற்சிகள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, பெண்களுக்காள இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி வருகிற 21.12:202 முதல் 27.01.2023 வரை 30 நாட்கள் இலவசமாக நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக கிழ்கண்ட அறிவிப்பை தங்களது செய்தித் தாளில் அறிவித்து பெண்கள் / சுய உதவி குழுக்கள் பயன்பெற உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கி றோம்.
பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி : மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின் படி கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம நடத்தும் பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி வருகிற 21.12:2022 முதல் 27.01.2023 வரை 30 நாட்கள் ஈரோடு கரூர் பைபாஸ் ரோடு, கொல்லம்பாளையம் பையாஸ் பஸ் ஸ்டாப், ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் உயர்நிலை பள்ளி வளாகத்தில் 2-ஆம் தளத்தில் நடைபெற உள்ளது.
பெண்கள்/சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்:
பயிற்சி பெற தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை. பயிற்சி தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை (ஞாயிறு தவிர) நடைபெறும், பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. மேலும் இலவச மதிய உணவு மற்றும் சீருடை வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் /நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்/சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய தொலைபேசி 0424 2400338 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கனரா வங்கி முதுநிலை மேலாளர் கே. கௌரி சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.