Close
செப்டம்பர் 20, 2024 2:30 காலை

சென்னையைப் போல தமிழகம் முழுவதும் மூத்த குடி மக்களுக்கான பேருந்து பயண சலுகையை விரிவு படுத்த கோரிக்கை

புதுக்கோட்டை

விழாவில் தலைமை உரையாற்றிய மாவட்டத் தலைவர் டி.ராஜேந்திரன். உடன் கூட்டுறவு தணிக்கை அலுவலர் ந.முகம்மதலி , உதவி கருவூல அலுவலர் வீ.கணேசன். உதவி இயக்குநர் கூட்டுறவுத் தணிக்கைக் துறை அ.பெரியசாமி ஆகியோர்

சென்னையைப் போல தமிழகம் முழுவதும் மூத்த குடி மக்களுக்கான பேருந்து பயண சலுகையை விரிவு படுத்த வேண்டுமென தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க புதுக்கோட்டை மாவட்டக்கிளை  தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட  ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர் நாள்  விழா சங்க கட்டிடத்தில் கொண்டாடப்பட்டது.

ஓய்வூதியர்களின் உரிமைக்காக  மத்திய அரசில் பாதுகாப்புத் துறையில் அலுவலராகப் பணியாற்றிய டி.எஸ்.நகரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசினை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கில், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களின் உரிமை என்றும், பணியிலிருந்து ஓய்வு பெறும் அலுவலர்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறார்களா என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் 17.12.1982 அன்று மத்திய அரசுக்கு, உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய இந்நாளினை ஒவ்வொரு ஓய்வுபெற்ற சங்கங்களும் ஓய்வூதியர்  நாளாகக் கொண்டாடி வருகின்றன.

புதுக்கோட்டையில் நடந்த ஓய்வூதியர் தின விழாவிற்கு மாவட்டத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.சுந்தரம் வரவேற்புரையாற்றினார். ஓய்வு பெற்ற கூட்டுறவுத் தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அ.பெரியசாமி,  தனது உரையில் ஓய்வூதியர்களின் தந்தை டி.எஸ்.நகரா, ஓய்வூதியர்களுக்கு ஆற்றிய அரும்பணிகள்  குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

சங்கத்தின் செயலாளர் அ.ஜனார்தனம், பொருளாளர் பொன். கந்தசாமி,  ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை துணை இயக்குநர் ந.இராமையா,  ஓய்வுபெற்ற உதவிக் கருவூல அலுவலர் வீ.கணேசன், ஓய்வுபெற்ற கூட்டுறவுத் தணிக்கை அலுவலர் என்.முகம்மது அலி , ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மா.கண்ணையா, கல்வித் துறை வீ.சின்னப்பா.

புதுக்கோட்டை
விழாவில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள்

கல்வித் துறை ஓய்வுபெற்ற சங்க மாவட்டத் தலைவர் க.கோவிந்தராசன், கல்வித் துறை ஓய்வுபெற்ற சங்க செயலாளர் பி.வி.இராசேந்திரன்,  கல்வித் துறை நேர்முக உதவியாளர் ந.இரவீந்திரன், மருந்தாளுனர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கல்வித்துறை மருத்துவத்துறை பொதுப் பணித் துறை கருவூலக் கணக்குத் துறை சார்ந்த  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்வித் துறையைச் சார்ந்த குடும்ப ஓய்வூதியர் ராஜேஸ்வரி தன்னை சங்க உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இறுதியாக சங்கத்தின் இணைச் செயலாளர் டெஸ்மா பெ.சேகர் நன்றி  கூறினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை.யில் நடந்த ஓய்வூதியர் நாள் விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள்

கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: ஓய்வு பெற்ற உதவிக் கருவூல அலுவலர் வீ.கணேசனின் மனைவி கமலா  மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 1.7.2022 அன்று முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கு வழங்கிய அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிட தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது.

நிலுவையில் உள்ள குடும்பப் பாதுகாப்பு நிதியினை காலதாமதமின்றி வழங்கிட வேண்டி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது.2022ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் சான்றினை அஞ்சல் அலுவலர்கள் மூலமாக விரைவில் வழங்;கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

22ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் சான்றினை ஓய்வூதியர்களுக்கு விரைவில் வழங்கியதுடன் வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு கருவூலப் பணியாளர்கள் மூலமாக ஓய்வூதியர்களின் இல்லங்களுக்கே சென்று நேர்காணல் செய்து அவர்களுக்கு உடனடியாக சான்றினை வழங்கிய புதுக்கோட்டை மாவட்டக் கருவூல அலுவலருக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாகப் ஒத்துழைப்பு நல்கிய கருவூலத் துறை அலுவலர்களுக்கும் நன்றி பாராட்டுவது.

நேர்காணலுக்கு வந்த ஓய்வூதியர்களுக்கு இரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கண்டறிந்து உரிய ஆலோசனைகள் வழங்கிய மாவட்ட மருத்துவத் துறைக்கு நன்றி தெரிவிப்பது.

சென்னையில் வழங்குவது போன்று மூத்த குடிமக்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணிக்க சலுகை வழங்கியது போல  தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top