வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாலூர் மற்றும் சாரங்கல் கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாலூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் பேரணாம்பட்டு ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனன், நகரமன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல், நகரமன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அகமத், ஒன்றிய துணை பெருந்தலைவர் லலிதா டேவிட், பேர்ணாம்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் பொகளூர் கே.ஜனார்த்தனன்.
மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.டேவிட், குடியாத்தம் ஒன்றிய செயலாளர் கள்ளூர் கே.ரவி, பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செளந்தரராஜன், மசிகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.தியாகராஜன், கொத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
..வேலூர் நிருபர்..