புதுக்கோட்டையில் யாதவர் அறநிலையம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டையில் 10-ம் வகுப்பு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற யாதவர் சமூ
புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நில அளவைத்துறை சங்கக்கட்டிடத்தில் நடை பெற்ற விழாவுக்கு மாநிலத் தலைவர் வி.ஜம்புலிங்கம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டதலைவர் எம்.ராஜேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசு சார்பாக பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து அதன் உறுப்பினராக யாதவர் ஒருவரை நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.
யாதவ இனத்தவர்களை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்.ஆடுவளர்ப்போர் நல வாரியம் அமைத்து அதன் தலைவராக யாதவரை நியமிக்க வேண்டும்.
விடுதலை போராட்ட வீரர் வீரன்அழகுமுத்துகோன் வரலாற்றை பாட நூலில் சேர்க்க வேண்டும். நெல்லை போன்ற மாவட்டங்களில் யாதவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும்.
ஆதரவற்ற விதவைப் பெண்களின் வாழ்வாரத்தை மேம்பாடு செய்ய அவர்களுக்கு இலவச பசுமாடு வழங்க வேண்டும். புதுக்கோட்டையில் விடுதலை போராட்ட வீரர் வீரன்அழகு முத்துக்கோன் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் மாநிலத் தலைவர் வி.ஜம்புலிங்கம் 10-ம் வகுப்பு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 12 மாணவிகளுக்கு தர்ம அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கியும் 2023 -ஆம் ஆண்டின் மாவட்டக் காலண்டர் வெளியிட்டும் பேசினார்.
பொதுச் செயலாளர் ஆடிட்டர் எல் ராகவன், மாநில பொருளாளர் ஜி ஜெயராமன், ஜெயமீனாக்குமாரி, சித்ரா , மாலா, தஞ்சை மாவட்டதலைவர் நாராயணன், மண்டல நிர்வாகி சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்டநிர்வாகிகள் தலைவர் எம்.ராஜேந்திரன்.
செயலாளர் கி.ரமேஷ் , பொருளாளர் தியாகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் கி.ரமேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை யாதவர் ஆலோசனை மாவட்ட மைய நிர்வாகிகள் செய்தனர்.