Close
செப்டம்பர் 19, 2024 11:15 மணி

கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

கோபி

கோபி சிறப்பு அலங்காரத்தில்மொடச்சூர் தான்தோன்றியம்மன்

ஈரோடு மாவட்டம், மொடச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ள தான்தோன்றியம்மன் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இக்கோயிலில் தான்தோன்றியம்மன், அம்மன் சந்நிதிகளும், விநாயகர் உபசந்நிதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது.  இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.  இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால்நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறுகிறது தேரோட்டம் நடைபெறுகிறது.

கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் அம்மன் சந்நிதி எதிரே 40 அடி நீளத்தில் திருக்குண்டம் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்துக்காக, திருப்பணிகள் தொடக்கமாக, கடந்த, 2018 ஜூலை மாதத்தில்  பாலாலயம் நடந்தது.

கோபி
கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழா

அதன்பின் கடந்த, 2019  -ல், மக்களவைத் தேர்தல் நடத்தை விதி, கொரோனா தொற்று முழு ஊரடங்கு, துறை ரீதியாக அனுமதி கிடைப்பதில் இழுபறி உள்ளிட்ட காரணங்களால், திருப்பணி துவங்குவதில் சிக்கல் நீடித்தது. இதனால், அன்று முதல் இக்கோவிலில், கடந்த நான்காண்டுகளாக, குண்டம் தேர்த்திருவிழா நடக்கவில்லை.

இந்நிலையில், திருப்பணிகள் அனைத்தும் முடிந்து, 23 ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது கும்பாபிஷேக விழா, கடந்த, 11 -ல் கோலாகலமாக நடந்தது. இதையடுத்து, நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா வரும், 14 -ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 26  -ல் சந்தனக்காப்பு அலங்காரம், நேற்று மாவிளக்கு பூஜை நடந்தது இன்று காலை குண்டம் திருவிழா நடந்தது.

கோபி
குண்டம் விழாவில் பங்கேற்க வரிசையில் நின்ற பக்தர்கள்

குண்டத்தில் தலைமை பூசாரி தீமிதித்து துவக்கி வைத்தார் அதைத்தொடர்ந்து கோபி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 30  -ல் திருத்தேர் வலம் வருதல், 2023 ஜன., 1 -ல் தெப்பத்தேர் உற்சவம், 2  -ல், மறுபூஜை, 6  -ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top