Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்,  இறையூர் வேங்கையூர் கிராமத்தில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பாக, தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம்,  இறையூர் வேங்கையூர் கிராமத்தில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பாக, தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பாக குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மருத்துவ முகாம் வேங்கைவயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.மணவாளன், ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா முத்தையா உள்ளிட்;டோர் பங்கேற்றனர்.

தோல் நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி மக்களுக்கு சிகிச்சை அளித்தார். இம்முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top