புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை அருகே ஆவுடையாபட்டியில் உள்ள தர்மா முதியோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.
செஞ்சுரி லயன்ஸ் சங்கத் தலைவர் லயன்ஸ் அரவிந்த் பட்டயத் தலைவர் கண்ணன், செயலாளர் டேவிட், பொருளாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பக்தவசலம் ,அன்புசண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்வில் முதியவர் சுப்பிரமணி பேசுகையில், பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
பொங்கல் என்பதற்கு `பொங்கி வழிதல்’, `பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும்.
மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனி யெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் தர்மா முதியோர் இல்ல நிர்வாகி சந்திரசேகரன், மற்றும் வருவாய்த்துறை ரவிச்சந்திரன், செஞ்சுரி லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.