Close
நவம்பர் 22, 2024 12:07 மணி

எய்டு இந்தியா சார்பில் மாணவர்களுக்கு வண்ண உடை. எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கல்

புதுக்கோட்டை

எய்டு இந்தியா சார்பில் மாணவர்களுக்கு வண்ண உடை. எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வண்ண உடைகள் வழங்கப்பட்டது.

எய்டு இந்திய நிறுவனத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 35 நபர்களுக்கு வண்ண உடைகள் மற்றும் மருத்துவ மாணவ ருக்கு செல்போன், ஸ்டெதஸ்கோப், கல்வி உதவித் தொகைக் கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கவிஞர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மேற்படி நலத்திட்ட உதவிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வழங்கி பேசும்போது,

எய்டு இந்தியா நிறுவனம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும், மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது.

குறிப்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஏராளமான குடும்பங்களுக்கு இலவச வீடுகளை கட்டிக்கொடுத்து வருகிறது. மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய பணிகள் மிகவும் பாராட்டுக்குறியது என்றார்.

முன்னதாக எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ராஜா வரவேற்றார். யுரேகா வட்டாரப் பயிற்சியாளர் அன்பு கிளாடியஸ் நன்றி கூறினார். நிகழ்வில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், சமூக ஆர்வலர்கள் ஏ.ஸ்ரீதர், டி.சலோமி, எம்.ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top