Close
நவம்பர் 22, 2024 10:38 காலை

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் குடியரசு நாள் விநாடி வினா போட்டிகள்… மாணவர்களுக்கு அழைப்பு

புதுக்கோட்டை

குடியரசு நாளில் புதுகை அலுவலர் மன்றத்தில் விநாடி வினா போட்டிகள்

புதுக்கோட்டை அலுவலர்  மன்றம் சார்பில் நடத்தப்படும் விநாடி வினா போட்டியில் பங்கேற்க  மாணவர், மாணவியருக்கு அழைப்பு.

74 ஆவது    இந்திய குடியரசு நாள் விழாவை முன்னிட்டு   புதுக்கோட்டை  மாவட்ட  அளவிலான பள்ளிகளுக்கு இடை யேயான   பொது அறிவு  விநாடி வினா போட்டி புதுக்கோட்டை. பழைய பேருந்து நிலையம் அருகில்உள்ள அலுவலர்  மன்றத்தில் வரும்  26.01.2023 ( வியாழக்கிழமை )  காலை 10.30 மணி நடை பெற உள்ளது.

ஒரு பள்ளியிலிருந்து இரண்டு  மாணவர் அல்லது   மாணவியர் கொண்ட ஒரு   குழுவை அனுப்பலாம்.  நமது இந்திய திருநாட்டின்   வரலாறு,  புவியியல்,  இலக்கியம், கலாச்சாரம் , சுற்றுலா தளங்கள்,  அறிவியல் மற்றும் மற்றும் முன்னேற்றம், விளையாட்டு  வீரர்கள், தேசத்தலைவர்கள்  மற்றும் சாதனையாளர்கள் பற்றி அதிக    அளவில் வினாக்கள் கேட்கப்படும்.
முதல்  பரிசு ரூ.  2000,  இரண்டாம் பரிசு  ரூ. 1500, மூன்றாம் பரிசு ரூ. 1000   வழங்கப்படும்.
இப்போட்டியில்  பங்கு பெரும்  மாணவ மாணவியர் பட்டியலை ” செயலர் – அலுவலர்  மன்றம்,  பழைய பேருந்து நிலையம் அருகில் ,  புதுக்கோட்டை.” என்ற முகவரிக்கு  அல்லது lecganesan@yahoo.co.in என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி  வைக்க வேண்டும்.  தொடர்புக்கு.. முனைவர் சு.கணேசன், அலைபேசி 9786382393  .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top