Close
நவம்பர் 25, 2024 6:08 காலை

வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் குடியரசு நாள் விழா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் நடந்த குடியரசு நாள் விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில்
74வது குடியரசு நாள்  விழாவை முன்னிட்டு  மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 74 வது குடியரசு நாள் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  கல்லுரியின் முதல்வர் முனைவர் எம்.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார்.

வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் பி.கருப்பையா தலைமையுரையாற்றினார். பொருளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:

புதுக்கோட்டை
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்

நல்ல அனுபவத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். உடல்பலம், மனபலம், மன எழுச்சிப்பலம், சமுதாய பலம் போன்ற திறன்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வளர்த்து விட வேண்டும். மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற வேண்டும்.

சிறந்த மாணவர்களை உருவாக்கி அதன் மூலம் சமுதாய மாற்றத்தினை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மாணவர்கள் எவ்வாறு திறம்பட செயல்படவேண்டும்.  பெற்றோருக்கும் நாட்டுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை மாணவர்கள்  புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பாலிடெக்னிக் முதல்வர் ஜீவானந்தம், பேராசிரியர்கள், மற்றும் மாணவ,மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் எம்.திருவள்ளுவன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top