தமிழ்நாடு யாதவர் ஆலோசனை மைய மாநில செயற்குழு மற்றும் மாநிலபொதுகுழுகூட்டம் யாதவர் ஆலோசனை மையத்தின் மாநிலசெயற்குழு மற்றும் பொதுகுழுகூட்டம் மாநிலதலைவர் (காவல்துறைகூடுதல்கண்காணிப்பாளர்ஓய்வு)ஜம்புலிங்கம் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ஜிஎஸ்ஆர்கே. திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
யாதவர் ஆலோசனை மையத்தின் நிறுவனர் (துணைஆட்சியர்ஓய்வு) வீரஇளஞ்சோழன், ஆடிட்டர் எல்.ராகவன், மாநில பொது செயலாளர் ஜி.ஜெயராமன், மாநில பொருளாளர் என்.ரவிச்சந்திரன், மாநிலதுணைத் தலைவர் சிங்கப்பூர் தொழிலதிபர் விஜய்ஆனந்த், சிங்கப்பூரின் ஒய்ஏசி பொறுப்பாளர் வளர்மதிவிஜய்ஆனந்த் மற்றும் ஜிஎஸ்ஆர்கே திருமண மண்டபத்தின் உரிமையாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்நிகழ்வாக சிங்கப்பூர் வளர்மதிவிஜய்ஆனந்த், மாநிலத் தலைவர் சென்னை ஜம்புலிங்கம், சிங்கப்பூர் தொழிலதிபர் விஜய்ஆனந்த், மாநிலதுணைத் தலைவர் அரியலூர் என்.ரவிச்சந்திரன், ஸ்ரீரங்கம் ஜிஎஸ்ஆர்கே.திருமண மண்டப உரிமையாளர் விஜயராகவன், கூத்தாநல்லூர் மருந்தக உரிமையாளர் கண்ணன், மாயவரம் பார்த்திபன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். மாநிலத்தலைவர் ஜம்புலிங்கம் தலைமை வகித்து வரவேற்று பேசினார்..
தொடக்கமாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டனர். யாதவர் ஆலோசனை மையத்தின் நிறுவனர் வீரஇளஞ்சோழன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
ஒய்ஏசி மாநில மையம் சார்பாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஓய்எஸ்சி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல் பரிசு கோப்பையும், ஒய்ஏசிதஞ்சாவூர் மாவட்டத்திற்கு இரண்டாம் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிவரும் ஒய்ஏசிநிறுவனர் மாநிலதலைர், மாநிலபொதுச் செயலாளர், மாநில பொருளாளர் முன்னாள் தலைவர் ஆர்.கே.பாலகுணசேகரன் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் ஒய்ஏசி மாவட்டங்கள் சார்பாக நினைவுபரிசு வழங்கப்பட்டது.
மேலும் ஒய்ஏசி மாநிலமையம் சார்பாக தஞ்சாவூர் இளஞ்சேகரன், சிங்கப்பூர் தொழிலதிபர் விஜய்ஆனந்த், வளர்மதிவிஜய்ஆனந்த், எவ்விதகட்டணமும் இன்றி திருமண மண்டபத்தில்கூட்டம் நடத்தஅனுமதி அளித்த ஸ்ரீரங்கம் ஜிஎஸ்ஆர்கே.திருமண மண்டப உரிமையாளர் விஜயராகவன் ஆகியோரைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ராகவன் யாதவ ஆலோசனை மைய அறிக்கையையும் மாநில பொருளாளர் ஜி.ஜெயராமன் வரவுசெலவு அறிக்கையையும், மாநில துணைத் தலைவரும் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளரு மான முருகையா தீர்மானங்களையும் தாக்கல் செய்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவு எடுக்கும் வரை யாதவ இனத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் யாதவர்கள் அடிக்கடி படுகொலை என்ற செய்திகள் குறித்து கவலை தெரிவித்துக் கொள்வதோடு அங்கே யாதவர்கள்பயமின்றி அமைதியாக வாழ்ந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நலக்குழுவில் யாதவ இனத்திற்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் யாதவ இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ்அதிகாரி சுடலைகண்ணனை உறுப்பினராக நியமனம் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
அவருக்கு யாதவர் ஆலோசனை மையம் சார்பாக வழங்கப்பட்ட நினைவு பரிசை மாநில தலைவர் பெற்றுக் கொண்டார்.
ஆதரவற்ற கிராமப்புற ஏழை விதவைப் பெண்களின் முன்னேற்றத்திற்கென தனியாக ஒருவாரியம் அமைக்க வேண்டு என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
யாதவர் ஆலோசனை மைய தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பேராசிரியர் என்.ஆர்.நாராயணன் பேசும் போது தஞ்சாவூரில் யாதவ ஆலோசனை மையத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 50,000- நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்தார். யாதவர் ஆலோசனை மைய துணைதலைவர் பேராவூரணி செல்வராஜ் பேசும் போது பொதுக்குழு ஒய்ஏசி தர்ம அறக்கட்டளைக்கு ரூ.1000-நன்கொடை அளித்தார்.
சிங்கப்பூர் தொழிலதிபர் விஜய்ஆனந்த், வளர்மதிவிஜய் ஆனந்த் ஆகியோர் பேசிய போது, யாதவர் ஆலோசனை மையத்திற்கு தேவைப்படும் உதவி செய்வதாக உறுதியளித்தனர். மூவருக்கும் மாநிலபொதுக் குழுவில் பாராட்டும் நன்றியும்தெரிவிக்கப்பட்டது.
நமது யாதவ ஆலோசனை மையத்தால் நிர்வகிக்கப்படும் மணமகள் தேவை இணைய தளத்தில் பதிவிட்ட வரன்களில் கடந்த ஆண்டு மட்டும் 100 வரங்களுக்குமேல் திருமணம் முடிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. நிறைவாக நாகை மாவட் ட அமைப்பாளர் ராம.வீரையன் நன்றி கூறினார்.