Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

விவசாயிகள் விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுகை அருகே வம்பனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்

ஒன்றிய அரசின் விவசாய விரோதப் பட்ஜெட்டைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால்ரோட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.பெரமையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, பொருளாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் த.அன்பழகன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலளார் பி.சுசிலா உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும், வேளாண் திட்டத்தின் நலத்திட்டங்கள் உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் அந்தந்தப் பகுதி விவசாயிகளின் நெல்லையே கொள்முதல் செய்ய வேண்டும்;. நிலக்கடலைக்கு கட்டுபடியான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். வம்பன் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top