Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை

திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவின் மறுநாள் திங்கள் கிழமை நடைபெற்ற  முக்கிய நிகழ்வான  பூப்பிரித்தல்  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் அம்மனுக்கு பூக்களால் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதையடுத்து மறு நாள் (27.02.2023)  திங்கள்கிழமை நடைபெற்ற பூப்பிரித்தல்  நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு கலந்து கொண்டார்.

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மாசிப் பெருவிழாவை முன்னிட்டு  26.02.2023 அன்று பூச்சொரிதல் விழாவும், அதனைத்தொடர்ந்து, மாசி பெருந்திருவிழா 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை  காப்புக்கடுதலுடன் தொடங்கி 20.03.2023  வரை நடைபெற உள்ளது.

மேலும் வருகிற  13.03.2023 அன்று திருத்தேரோட்ட விழாவும் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. 2023 -ஆம் வருட மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 26.02.2023  துவங்கிய பூச்சொரிதல் விழாவின் ஒருபகுதியாக பக்தர்களால் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கயாக செலுத்தப்பட்ட  பூக்கள் அனைத்தும் அம்பாளுக்கு சார்த்தப்பட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பூக்கள் பிரசாதமாக    27.02.2023 -திங்கள்கிழமை  வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இந்துசமய அறநிலையத்துறை, புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் சார்பில் நடைபெற்ற பூச்சொரிதல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர்  திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அம்பாளுக்கு சார்த்தப்பட்ட பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் .திலகவதி செந்தில், உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர்  முத்துராமன், வட்டாட்சியர்  விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top