Close
நவம்பர் 22, 2024 11:59 காலை

மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்த போராட்டம்

மதுரை

மதுரையில் ஆவின் நிறுவனத்தை எதிர்த்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

மதுரையில் ஆவின் நிறுவனத்துக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நுகர்வோர் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கக் கோரி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட கூடாது என மதுரை ஆவின் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்த நிலையில் போராட்டம் நடைபெறுகிறது.

மதுரை ஆவினில் 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதர ஒன்றியங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் மொத்தம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.7 ஊக்கத்தொகையாக வழங்ககோரி பால் நிறுத்தப்போராட்டம் அறிவித்தனர்.

இதையடுத்து  ஆவின் பொதுமேலாளர் வெளியிட்ட அறிக்கையில்,  பால் விலை உயர்வு குறித்து அரசின் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் ,
மேற்கண்ட போராட்ட அறிவிப்பினை பொருட்படுத்தாமல், மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தைச் சார்ந்த பால் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களை நடத்தும் சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் பெறப்படும் மொத்த பாலினையும் தவறாமல் கொள்முதல் செய்து மதுரை ஆவினுக்கு வழங்கி பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பாதிக்காத வண்ணம் ஒத்துழைப்பு தர வேண்டும். தவறும் பட்சத்தில், 1983ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனங்கள் பால் லிட்டருக்கு ரூ.42 தருவதால் மதுரையில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகத்தை நிறுத்தி உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top