Close
நவம்பர் 22, 2024 1:38 மணி

கோபியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு

ஈரோடு

கோபிச்செட்டிபாளையம் நகராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்த திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மா. இளங்கோவன் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

கோபி மின் நகர் மற்றும் பிருந்தாவன் கார்டன் பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பூங்கா அமைப்பதற்கான பணிகளை  ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய தினசரி சந்தை வளாக கட்டுமான பணிகளையும், மொடச்சூர் வாரச்சந்தை கடைகள் கட்டுமான பணிகளையும், அறிவு சார் மைய கட்டுமான பணிகளை யும், பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் டாய்லெட் பணிகளை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மையில் நுண் உர கூட செயலாக்கம் மைய பணிகளையும், வழ மீட்புமைய பணிகளையும், உயிரி எரிவாயு கூட பணிகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது,  கோபி நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ், நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், நகராட்சி பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர்கள் ராஜேஷ், பிரேமா, துப்புரவு அலுவலர் சோழராஜ் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும், திடக்கழிவு மேலாண்மை பணி சிறந்த முறையில் செயல் படுத்தப்பட்டு  வருவதற்காக  அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top