அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் விளக்கப் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரவைக்கு மாவட்டத் தலைவர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். பேரவையில் கலந்துகொண்டு மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பி.ராமசாமி, எம்.ஜோஷி, கே.சித்திரைவேல், எஸ்.பெருமாள், எம்.சண்முகம், பி.சக்திவேல், ஏ.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.