Close
ஏப்ரல் 9, 2025 6:35 காலை

புதுகை அரசு ஐடிஐ நாட்டு நல பணி திட்டம் சார்பில் புதுக்குளத்தில் தூய்மைப்பணி

புதுக்கோட்டை

புதுகை புதுக்குளக்கரையில் தூய்மை பணி மேற்கொண்ட அரசு ஐடிஐ நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளம் வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மாணவர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி  நிலைய முதல்வர் எஸ். குமரேசன் தலைமையில்  நடைபெற்றது.

நிகழ்வில், புதுக்கோட்டை நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் எஸ் .நாகராஜன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்கள்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆர்.சிவக்குமார் வரவேற்றார் நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சேகரன், மேற்பார்வை யாளர் மணிவண்ணன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண. மோகன் ராஜா, சங்கச் செயலாளர் எஸ்.செந்தில்வேல் பொருளாளர் ஏ.ஆர்.முகமது அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கர், பரமசிவம், ஆரவாமுதன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பிரேமானந்தன், கவிவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top