Close
நவம்பர் 25, 2024 6:12 காலை

கோபி நகராட்சியில் தூய்மைத் திருவிழா

ஈரோடு

கோபி நகராட்சியில் நடைபெற்ற தூய்மை திருவிழா

கோபி நகராட்சியில் பூஜ்ய கழிவு திட்டம்,  கோபி உழவன் ரோட்டரி சங்கம் சார்பில் தூய்மை திருவிழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், உழவன் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், கோபி ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி. வைரவிழா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி, சமுதாய அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, வைரவிழா துவக்கப்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய திடக்கழிவு மேலாண்மை குறித்த பேச்சு போட்டி, நாடகம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள்

வழங்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் வீடுகள் தோறும் மக்கும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுப்பது மட்டுமில்லாமல், குப்பைகள் உருவாவதை குறைப்பது மற்றும் பயன்பாட்டுக்கு பயன்படும் பொருள்களை மறு பயன் பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழிவுகள் உருவாக வகையில் துணியினால் ஆன பேனர் பயன்படுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top