Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

புதுக்கோட்டை அருகே மேலகொல்லை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே மேலகொல்லை கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை அருகே மேலகொல்லை கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது.

 புதுக்கோட்டை அருகே மேலகொல்லை கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 99 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஒவ்வொரு மாட்டிற்கும் 9 பேர் கொண்ட குழு களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் திடலில் நீண்ட கயிறில் மாட்டை கட்டி விட்டு அதை அடக்க 9 பேர் கொண்ட குழுவை களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

இதில் காளைகளை அடக்குவதற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கி போட்டி தொடங்கியது. இதில் வீரர்கள் 20 நிமிடத்திற்குள் போட்டி போட்டுக் கொண்டு சில காளைகளை அடக்கினர்.

சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து அவர்களை மிரள வைத்தது மேலும் மாடு பிடி வீரரை காளை மாடு முட்டி வீசியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் அதேபோன்று காளைகளை அடக்கி வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. இந்த வடமாடு மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top