Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

ஆத்தூர் மேற்கு-கிழக்கு திமுக  ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கிழக்கு-மேற்கு திமுக ஒன்றியத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு‌ உட்பட்ட‌ ஆத்தூர் மேற்கு-கிழக்கு திமுக  ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து‌ ஆலோசனை கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌‌, திமுக  மாநில விவசாய அணி இணைச் செயலாளர் ஆத்தூர் தொகுதி பார்வையாளர் .கள்ளிப்பட்டி மணி மற்றும் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி மற்றும் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இராமன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் சுப்ரமணியம், மாவட்ட, ஒன்றியக்கழக, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top