மதுரையில், தாம்பிராஸ் அமைப்பின் சார்பில், சோபகிருது வருட (2023-2024) பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது.
அவ்விழாவில், தாம்பிராஸ் சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ மான் சென்னை வெங்கட்ராமன் தலைமையேற்றார்.உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் பஞ்சாங்கத்தை வெளியிட்டார். ம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் பெற்றுக் கொண்டார்கள்.
மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீரங்கம் வரதராஜ ஐயங்கார் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட தலைவராக ஸ்ரீராம் கண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக ராஜ்குமார் , செயலாளர் ஆதித்யா ராமசாமி, துணைத்தலைவர் பாப்பான்குளம் கிருஷ்ணன், அகில் ரமேஷ் கண்ணன், பாலாஜி சாஸ்திரிகள், பட்டாபி, கோபால்சாமி, ஜெயஸ்ரீ விக்னேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.