Close
ஏப்ரல் 5, 2025 12:34 மணி

கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

ஈரோடு

கோபி பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் திறந்து வைக்கப்பட்ட நீர் மோர்பந்தல்

ஈரோடு வடக்கு மாவட்ட கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கோபி பேருந்து நிலையத்தில்  நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க  தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கோடை கால நீர் மோர்ப்பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக,  கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்ல சிவம்  திறந்து வைத்து பொதுமக்களுக்கு  நீர்மோர் மற்றும் தர்ப்பூசணி பழத்தை வழங்கினார்.

இதில், நகர செயலாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் நாகராஜ் மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்துரவிசந்திரன் நகர்மன்ற உறுப்பினர்கள் விஜய் கருப்புசாமி, மெய்யழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top