மதுரையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன.
மதுரை புறநகர் பகுதிகளில், பலத்த காற்றுடன் லேசான மழைக்காற்றில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது. அந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றி காரை மீட்டனர்.
மதுரை புறநகர் பகுதிகளான, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர் ஆகிய பகுதிகளில், பலத்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக பெய்த இந்த மழையால் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
பலத்த காற்றுடன், மழை பெய்ததில் மதுரை திருநகர் முதல் ஸ்டாப் அருகே உள்ள பாண்டியன் நகரில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான புதிய கார் மீது பெரிய மரம் சாய்ந்ததில், காரில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் நிறைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி மரத்தை மட்டும் வெட்டி மரத்துக்கு அடியில் சிக்கியிருந்த காரை அகற்றினர். இதில், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.