Close
செப்டம்பர் 20, 2024 6:54 காலை

சென்னை துறைமுக துணைத்தலைவராக எஸ். விஸ்வநாதன் பொறுப்பேற்றார்

சென்னை

சென்னை துறைமுக துணைத்தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட எஸ் விஸ்வநாதன்

சென்னை துறைமுக துணை தலைவராக எஸ். விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ்., திங்கள்கிழமை பொறுப்பேற்றார் .

சென்னை துறைமுக துணைத் தலைவராக அயல் பணி அடிப்படையில் பணியாற்றி வந்த எஸ். பாலாஜி அருண்குமார் கடந்த மாதம் தனது பணிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து ரயில்வே அமைச்சகத்திற்கு திரும்பினார்.

இதனையடுத்து காலியாக இருந்த சென்னை துணைத் தலைவர் பொறுப்பிற்கு எஸ் விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ். யை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நியமனம் செய்தது.

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட எஸ். விஸ்வநாதன் இயந்திரவியலில் பொறியியல் பட்டமும்,  நிர்வாகவியலில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். இந்திய குடிமை பணி தேர்வில் 2008-ம் ஆண்டு  தேர்ச்சி பெற்ற விஸ்வநாதன் மத்திய பிரதேச மாநில பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.

  மத்திய பிரதேச சுற்றுலா மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர், மருத்துவ கல்வி வாரிய கூடுதல் செயலாளர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் திறம்பட பணியாற்றியுள்ளார்.

சென்னை துறைமுகத்தின் தலைவராக துணைத் தலைவராக திங்கள் கிழமை பொறுப்பேற்ற விஸ்வநாதனுக்கு சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் துறை தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மத்திய பிரதேச மாநில பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ். விஸ்வநாதன் மத்திய அரசில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top