Close
ஏப்ரல் 3, 2025 11:32 மணி

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர்மன்றத்தலைவர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மழை நீர் கால்வாய் சீரமைக்கும் பணியை பார்வாயிட்ட நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்

கோடை மழை புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் : 24, 25 கம்பன் நகர், பெரியார் நகர் பகுதிகளில் கனமழையின் காரணமாக வரத்து வாரிகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட நேரிட்டது.

தகவலறிந்த புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று  போர்க்கால அடிப்படையில் வரத்து வாரிகளில் இருந்த அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

நகர  ஆய்வாளர், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்  மற்றும் தூய்மை பணியாளர்கள் களத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top