ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டுமென மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையொட்டி ஆழ் கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல மீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளின் அடிப்படையில் மீனவர்கள் யாரும் தற்போது கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்க கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை மற்றும் கிழக்கு கடலோர பகுதியை சார்ந்த விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயார் நிலையில்துறைமுகங்கள்…
சென்னை எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புயல் ஏற்படும் நிலையில் இதற்கான தயார்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன இருப்பினும் எச்சரிக்கை கூண்டு ஏதும் இதுவரை ஏற்றப்படவில்லை என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.