Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

600-க்கு 600 மதிப்பெண் எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை

திண்டுக்கல்

பிளஸ் 2 தேர்வில் 600 -க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி

பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை (அரசு உதவிபெறும் பள்ளி) சேர்ந்த மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார்- பானுப்ரியா ஆகியோர்  மகளான நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல், கணினி அறிவியல் ஆகிய 6 பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்து 600-க்கு 600 மதிப்பெண்களைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி எஸ்.நந்தினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தந்தை கூலித் தொழிலாளி; படிப்புதான் ஒரே சொத்து என கூறி பெற்றோர் என்னை வளர்த்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கத்தால்தான் சாதனை படைக்க முடிந்தது.

அவர்கள் என் மீது எந்த திணிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுவே நான் முழு மதிப்பெண் பெறுவ தற்கு துணையாக இருந்தது. நான் ஆடிட்டராக விரும்பு கிறேன்.சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை; அதற்காகவே கடினமாக படித்தேன் என்று நந்தினி தெரிவித்தார்.

திண்டுக்கல்
சாதனை படைத்த மாணவி நந்தினியை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன்

இதையடுத்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிளஸ்2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று  சாதனை படைத்த  மாணவி நந்தினிக்கு, ஆட்சியர் கலெக்டர் விசாகன் புத்தகம் வழங்கி பாராட்டினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top