Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

பெருந்துறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா ஆலோசனைக்கூட்டம்

பெருந்துறை

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார். மாவட்ட கழக செயலாளர் கே சி கருப்பணன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் கே. சி. கருப்பணன் ஆலோசனை வழங்கினார்.

எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கும் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுய வேலைவாய்ப்பை தேடும் இளைஞர்களுக்கு மானிய விலையில் 200 ஆட்டோக்களை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு உறுப்பினருமான ஜெயக்குமார் தனது சொந்த பொறுப்பில் வழங்குகிறார்.

புதிய பஸ் நிலைய பகுதியில் காலை 8 மணி அளவில் ஆட்டோ வழங்கும் விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது .
கூட்டத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விளம்பர தட்டிகள், 2000க்கும் மேற்பட்ட கொடிகள், 100 க்கும் மேற்பட்ட அலங்கார பதாகைகள், தோரணங்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட முக்கிய திருக்கோ யில்களில் சக்கரை பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டோ வழங்கும் நிகழ்வைஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா ஆலோசனை ,சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து  கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் துவக்கி வைத்து, அதன் தொடர்ச்சியான இந்த நிகழ்ச்சி பெருந்துறையில் நடைபெறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவை தலைவருமான கே சி பொன்னுத்துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பொன்னுசாமி, கே எஸ் பழனிச்சாமி, யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், பொருளாளர் மணி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top