Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

புத்தகம் அறிமுகம்.. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு…

புத்தகம் அறிமுகம்

ராஜாஜி வாழ்க்கை வரலாறு

சில தலைவர்களின் வரலாறு, அது ஒரு தேசத்தினுடைய வரலாறாகவே இருக்கும். திலகர்,மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, தமிழகத்தில் சத்தியமூர்த்தி, காமராஜ் என்று இன்னும் பலரையும் குறிப்பிடலாம். அந்த வகையைச் சார்ந்ததுதான் ராஜாஜியின் வரலாறும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய முகமாகவும், தமிழக முகமாகவும் இருந்தவர் ராஜாஜி. இந்தியாவின் முதல் குடிமகன் (முதல் இந்திய கவனர்-ஜெனரல்) தமிழகத்தின் முதல்வர் என்று இரண்டும் ஒருவருக்கென்றால் அது ராஜாஜிக்கு மட்டுமே.

5 குழந்தைகளுடன் 21 வயது மனைவியை 37 வயதில், இழந்த பின்பும் துறவிபோல் வாழ்ந்த பெருகனார் அவர். “ராஜாஜி: வாழ்க்கை வரலாறு” என்ற இந்த நூலில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பணிகள், மதுவிலக்குக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள், சுதந்திரத்திற்குப் பின் அவர் செயல்பாடுகள் என்று அனைத்து விஷயங்களையும் விரிவாக எழுதியிருக்கிறார் ராஜ்மோகன்.

ராஜ்மோகன் காந்தி, காந்தியின் மகன் தேவதாஸ்-ராஜாஜி மகள் லட்சுமிக்கும் பிறந்தவர். வாழ்நாள் முழுவதும் காந்திய வாழ்க்கை வாழ்ந்தவர்.எம்.ஆர்.ஏ.(Moral Re-armament) என்ற அமைப்பின் மூலம் உலகின் பல நாடுகளில் பல்லாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு, தீர்வு கண்டவர். ஒரு முறை தேர்தலிலும் நின்று தோற்றுப்போனவர்.

தனது பாட்டனாரின் வரலாற்றை நடுநிலையோடு எழுதியிருக்கிறார். இந்த ஆங்கிலப் புத்தகத்தை கல்கி ராஜேந்திரன் அழகாக தமிழில் மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார் நமக்கு.1000 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

==பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top