Close
நவம்பர் 22, 2024 1:25 மணி

அரசுப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சகுறிச்சி, கோமாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சகுறிச்சி, கோமாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவை பார்வையிட்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா  பேசியதாவது.

இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பொழுது இல்லம் தேடிக் கல்வி செயலியில் பதிவேற்ற வேண்டும்.

எல்.கே.ஜி முதல் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை செயலியில் பதிவேற்ற செய்யலாம் எனவும் ,
ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய சோதனை கள் மூலம் கணித, அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங் கள் அதற்கான வாய்ப்புகளை வானவில் மன்றமும் இல்லம் தேடிக் கல்வி மையமும் இணைந்து கோடைகாலத்தில் வழங்கிறது என்று பேசினார்.

இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெறும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், ஓரிகாமி மூலம் தொப்பி செய்தல் ,படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்திருந்தனர்

இந்நிகழ்வில் கோமாபுரம், தச்சங்குறிச்சி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top