Close
நவம்பர் 22, 2024 12:37 காலை

புவிசார் நவீன தானியங்கி (GPS) அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம்: அமைச்சர் சிவசங்கர் தொடக்கம்

தஞ்சாவூர்

கும்பகோணம் கோட்டத்தில் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நிகழ்வை தொடக்கி வைத்தார். அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 

புவிசார் நவீன தானியங்கி (GPS) அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை  போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (13.05.2023) தொடங்கி வைத்தார்.

பின்னர்  போக்குவரத்து துறை அமைச்சர்  சா.சி.சிவசங்கர்  கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் புவிசார் நவீன தானியங்கி (GPS) அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம். போக்குவரத்து கழக பேருந்துகளில் புனிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் பொறுத்த திட்டமிட்டு முதற்கட்டமாக 100 பேருந்துகளில் திருச்சி-40. கரூர்-15, தஞ்சாவூர் -25, கும்பகோணம் 20)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு. அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே அறிவிக்கப்படும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் அறிந்து கொண்டு என்னித சிரமம் இன்றியும், கால தாமதமின்றியும் பேருந்திலிருந்து இறங்கிட ஏதுவாக இருக்கும்.

மேலும்,இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள். மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு இத்திட்டம் நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர்  சா.சி.சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்,

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர்  சா.சி.சிவசங்கர் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் ஓட்டுநர் கையேடுகளை ஓட்டுனர்களுக்கு வழங்கினார்

இந்நிகழ்ச்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்  துரை.சந்திரசேகரன் (திருவையாறு),  க.அன்பழகன் (கும்பகோணம்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் திரு.சண் ராமநாதன், துணை மேயர் மரு. அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் .எஸ். ராஜ்மோகன். பொது மேலாளர்கள்  ஜெபராஜ் நவமணி,  முகமது நாசர், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, நகர காவல் துணை கண்காணிப்பாளர்ராஜா, துணை மேலாளர்கள் தமிழ்செல்வம்,  ராஜா, சிங்காரவேலு மற்றும் மாவட்ட அரசு அலுவலர்கள் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top