Close
நவம்பர் 22, 2024 10:09 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர்கள் காலி பணியிடங்களுக்கு மே 31 க்குள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் செலிலியர் பணி வாய்ப்பு

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள 31 ஒப்பந்த செவிலியர்கள் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2023 ஆகும்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள 31 ஒப்பந்த செவிலியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் வழியாக நிரப்பப்பட உள்ளது.

மேற்கண்ட தற்காலிக ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி செவிலியர் பட்டயபடிப்பு ((Diploma in GNM)) அல்லது  இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing)) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு Nursing Council–லில் பதிவு செய்திருக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தால் அதற்கான முன்அனுபவச் சான்று முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவர்களிடமும், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தால் முன் அனுபவச் சான்று இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களிடமும் சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பணிகளில் பணிபுரிந்திருந்தால் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அவர்களிடம் முன் அனுபவச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்அனுபவச் சான்று கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். மேற்கண்ட செவிலியர்களுக்கு ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.18இ000- வழங்கப்படும்.

இப்பணியிடங்கள் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமானது எனவும் மேலும், இப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அப்பணியிடங்களுக்கான நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.05.2023 அன்று மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பம்  https://pudukkottai.nic.in  என்ற புதுக்கோட்டை மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top