Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

பழிவாங்கும் நடைவடிக்கைக்கு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

புதுக்கோட்டை

கண்டனம்

தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 9 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 4 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இங்கு சுகாதாரா ஆய்வாளராகப் பணியாற்றும் க.மணிவண்ணன் 5, 6, 7 ஆகிய பிரிவுகளில் பணியாற்றுகிறார். இந்நிலையில் கடந்த 15.05.2023 அன்று 5-ஆம் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆர்.சரஸ்வதி 6-ஆம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணியாற்ற முடியாது என்பதைக்கூட கணக்கில் கொள்ளாமல் முறையற்ற காரணங்களை கூறி எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் க.மணிவண்ணன் மற்றும் சுகாதார அலுவலர் (பொறுப்பு) நா.கணேசன் ஆகியோரை  ந.நி மண்டல இயக்குநரால் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியில் குறை, தவறு, இருப்பின் நேரில் அழைத்து விளக்கம் கேட்டு, பின் ஆலோசனை வழங்கி  சரிசெய்ய படுத்தியிருக்கவேண்டும். அதிலும் குறைபாடு ஏற்படின் பணி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.. அதனை விடுத்து  சுகாதார ஆய்வாளரை தண்டிக்கவேண்டும் என்ற உள் நோக்கத்திலேயே மண்டல இயக்குநர் ஆய்வு செய்தது போல் தெரிகிறது. மேலும் க.மணிவண்ணன் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் பொறுப்புகளிலும் இருந்து வருகிறார்.

இதுவரை இவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே யாருடைய தூண்டுதலின் பேரிலோ பணியிடை நீக்கம் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் பணியிடை நீக்கம் செய்தது தவறான நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டத்திற்கு திட்டமிடுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top